X

அறிவோம் பசலைக்கீரை

Views: 198

கோடை காலத்தில் வரக்கூடிய நோய்கள் மற்றும் உடல் கோளாறுகளை தீர்ப்பதில், கீரை வகைகளில் முக்கியக் கீரையாகக் கருதப்படும் பசலைக் கீரை பிரதானப் பங்காற்றுகிறது!பசலையில் கொடிப்பசலை, குத்துப்பசலை, தரைப்பசலை, வெள்ளைப் பசலை, சிலோன் பசலை என பலவகை உள்ளன. இதில் குத்துப்பசலை தாராளமாகக் கிடைக்கக்கூடியது. இதனை சிறுபசலை, பசறை என பல் வேறு பெயர்களில் அழைக்கிறார்கள். இந்தக் கீரையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. அடிக்கடி இந்தக் கீரையைச் சாப்பிட்டு வந்தால் நோய்கள் அணுகாது. புது ரத்தத்தை உற்பத்தியாக்கி உடலுக்கு பலம் தரக்கூடிய இந்த குத்துப் பசலையின் இலையை நன்றாகச் சிதைத்து பற்று போட்டால் கொப்புளம், கழலை, வீக்கம் சரியாகும். இதன் இளம் தண்டை அரைத்து வேர்க்குரு, கைகால் எரிச்சல் போன்றவற்றுக் குத் தடவினால் குணம் கிடைக்கும். பசலைக்கீரை சாப்பிடுவதால் மூத்திரக் கடுப்பு, நீரடைப்பு, வெள்ளை ஒழுக்கு போன்றவை நீங்கும். மலச்சிக்கல், தொந்தி போன்றவற்றுக்கும் இந்தக் கீரை நல்லதொரு நிவாரணி. கால் மூட்டுகளில் வரக் கூடிய வாதத்தை போக்கக்கூடியது. கீரையின் சாறு, முகப்பருக்களை நீக்கக்கூடியது. வெள்ளைப்பசலை சாப்பிடுவது மூத்திரத்தை அதிகரித்து உட்சூட்டை குறைக்கும். கொடிப்பசலை சாப்பிடுவது தாகம், சூட்டை தணிக்கும்.

பாசிப்பருப்புடன் சேர்த்துச் சாப்பிட்டால் வெள்ளை, வெட்டை நோய்கள் சரியாகும். கர்ப்பிணிப் பெண்கள் இந்த கொடிப்பசலையை சாப்பிடுவதால் மலச்சிக்கல் ஏற்படாமல் காக்கும். குழந்தைகளுக்கு இதன் தண்டின் சாறை கற்கண்டுடன் சேர்த்து குடிக்கக் கொடுத்து வந்தால் ஜீரண வளர்ச்சிக்கு உதவுவதோடு சளி, நீர்க்கோவை போன்றவை சரியாகும். இது பெரியவர்களுக்குத் தாதுவைக் கெட்டிப்படுத்தி ஆண் – பெண் நல்லுறவை ஏற்படுத்தும். சிலோன் பசலைக் கீரை சாப்பிடுவதால் வாதம், பித்தம், கபம் ஆகிய முக்குற்றங்களை நீக்கி கண்ணுக்கு அதிக நன்மை தரும். இந்தக் கீரையுடன் பருப்பு சேர்த்துச் சாப்பிடுவதால் உடல் வெப்பம் தணிந்து நீர்ச்சுருக்கு, நீர்க்கட்டு, நீர்க்கடுப்பு நீங்கும்.

Related Post
Show comments

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.