X
    Categories: Tips

கோலங்கள்

Views: 317

“குடும்ப நலம் காக்கும்” முன்னோர்கள் உருவாக்கிய வீட்டு வாசலில் கோலமிடும் பழக்கம். குடும்பம் ஒரு கோவில் போன்றது. அங்கே அன்பும் ஒற்றுமையும் மிகுந்திருக்கும் பொழுது அருளும் பொருளும் தேடி வரும்.

நம் கலாசாரத்தின் பழமையினைப் பகரும் கோலங்கள் மூலம் மகிழ்ச்சியினைப் பரிமாறிக் கொள்ளலாம். புள்ளி வைத்து போடும் கோலத்தில் புள்ளிகளைச் சுற்றி இணைத்தல், புள்ளிகளை இணைத்தல் என இரண்டு வகைகள் உள்ளன. புள்ளி வைத்து போடும் கோலங்களுக்கு தென்னிந்தியா பிரபலம் என்றால், புள்ளிகள் இல்லாமல் வளைவுகளை மட்டுமே ஒன்று சேர்க்கும் ரங்கோலி வகை கோலங்கள் வட இந்தியாவில் பிரபலம். கேரளாவில் ஓணம் பண்டிகையின்போது போடப்படும் அத்தப்பூ கோலம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்படுகின்றன. சிறுவயதில் கோலம்

சிறு வயதில் பிள்ளைகளுக்கு எழுத்துகளின் வளைவு நெளிவுகளை கற்றுக்கொடுப்பதற்காகப் புள்ளிகளை இணைக்கச் சொல்லி பயிற்சி கொடுப்பதுதான் கோலம் போட கற்றுக்கொள்வதற்கான முதல் படி. எழுத கற்றுக் கொடுப்பதோடு கோலம் போடவும் பிள்ளைகளுக்குப் படிப்படியாக கற்றுக் கொடுத்து, அவற்றுக்கு வண்ணப் பொடிகளைப் பயன்படுத்தி அழகுப்படுத்தவும் அவர்களை ஊக்கப்படுத்தினால் வீட்டு வாசலில் கோலம் போடும் நமது பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லுவது மிகவும் எளிதாக இருக்கும்.

இல்லறத்தில் நல்லறத்தை வளர்க்கும் பொழுதுதான் பேரின்பப் பெருவாழ்வான அழியா ஒளிச் சரீரத்தை எளிதில் நாம் பெற முடியும். நம் முன்னோர்கள் நல்ல பண்புகளை நமக்கு உருவாக்கிக் கொடுத்துள்ளார்கள். அதில் ஒன்று காலையிலும் மாலையிலும் வீட்டைப் பெருக்கி வாசலைத் தெளித்துக் கோலமிடும் பழக்கம்.வீட்டைப் பெருக்கி வாசலைத் தெளித்து அழகான கோலங்களைப் போட்டு வைப்பது வீட்டில் நிலவும் மகிழ்ச்சியையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தும்.அது மட்டுமில்லாமல் வீட்டிற்கு வருகை தரும் நண்பர்களிடத்திலும் விருந்தினர்களிடமும் மகிழ்வான உணர்வுகளை வெளிப்படுத்தச் செய்யும். அந்த வீட்டில் அனைவரின் மகிழ்ந்த உணர்வுகள் வெளிப்படும் பொழுது அந்த உணர்வுகள் வீட்டில் பதிந்து அந்த வீட்டிற்கு வருகை தரும் அனைவரயும் மகிழச் செய்திடும் நிலை அங்கே நிலவும்.
எனவே வீடுகளில் கோலமிடும் பொழுதெல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும்,எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும், எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.மேலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் குடும்பம் முழுவதும் படர வேண்டும் எங்கள் குடும்பத்திலுள்ள அனைவரும் பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.எங்கள் குடும்பத்தில் உள்ள அனவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியால் “ஒற்றுமையாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்திட.., அருள்வாய் ஈஸ்வரா” என்ற எண்ணத்துடன் கோலமிடுங்கள்.இத்தகைய எண்ணங்களை எண்ணிக் கொண்டு.., கோலமிடும் கோலப்பொடியைத் தொடும் பொழுது அந்த உணர்வுகள் “அந்தப் பொடிக்குள் படர்கின்றது”.அதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் மன மகிழ்ச்சி பெற இது உதவுகின்றது.

சில விதிகள் ஏற்ப கோலமிட்டால் வாழ்க்கையில் வளம் சேரும். சூரியன் உதிப்பதற்கு முன்பு பசுஞ்சாணம் தெளித்து கோலம்போட வேண்டும். வீட்டு வாசலில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம் எனவே புது தண்ணீரே தெளிக்க வேண்டும். தெற்கு பார்த்தோ, தெற்கில் முடியும்படியோ கோலம்போடக்கூடாது. கோலம் போட்டதும் காவி இடுவது மும்மூர்த்திகளை குறிக்கும். கோலத்தின் நடுவில் செம்பருத்தி, பூசணி பூ வைத்தால் செல்வம் சேரும். வியாழக்கிழமை துளசி மாட கோலம், வெள்ளிக்கிழமை எட்டு இதழ் தாமரை கோலம் சனிக்கிழமை பவளமல்லி கோலம் பவுர்ணமி தினத்தன்று தாமரைப்பூ கோலம் ஞாயிற்றுக்கிழமை செந்தாமரை கோலம், திங்கட்கிழமை அல்லி மலர்க்கோலம் செவ்வாய்க்கிழமை வில்வ இலை கோலம், புதன் மாவிலைக்கோலம் ஞாயிற்றுக்கிழமை சூரிய கோலம் போடுதல் நல்லது. வீட்டுச்சுவரையொட்டி போடும் பார்டர் கோலம் தீய சக்திகளை உள்ளே விடாது. அமாவாசை மற்றும் இறந்தவர்களுக்கு திதி தரும் நாட்களில் வாசலில் கோலம் போடக் கூடாது. அந்த ஆத்மாக்களை வீட்டினுள் அனுமதிக்காமல் கோலங்கள் தடுக்கும். அதனால் நம் முன்னோர்கள் நம்மை தேடி வருகிற திதி தரும் நாளில் வாசலில் கோலங்கள் போடாமல் இருந்து, அவர்களை வீட்டினுள் அனுமதித்து ஆசி பெறுவது நல்லது. இடது கையால் கோலம் போடக்கூடாது. பெண்கள் குனிந்து நின்றே கோலம் போட வேண்டும். உட்கார்ந்து போட்டால் செல்வம் குறையும். கணவர் வெளியில் செல்லும் முன்பே கோலம் போட்டுவிடவேண்டும். கோலம் போட்ட பிறகே அடுப்பு பற்றவைக்க வேண்டும். ஆள்காட்டி விரலை நீக்கியே கோலம் போட வேண்டும். கிழமைக்கு ஏற்ப வாசலில் கோலமிட்டால் கெட்ட ஆவிகள் நம் வீட்டை நெருங்காது.

  • கம்பிக் கோலங்கள்
    • பாம்புக் கோலம்
    • தாமரைக் கோலம்
  • புள்ளிக் கோலங்கள்
    • புள்ளிகளை இணைத்தல்
    • தொட்டில் கோலம்
    • புள்ளிகளிடையே வரைதல்
    • தேர்க் கோலம்
    • துளசி மாடம்
    • குத்து விளக்குக் கோலம்
    • ஊடுபுள்ளிக் கோலங்கள்
    • புள்ளிகளை இணைத்தல்
    • வில்வ இலைக் கோலம்
    • பாகல் இலைக் கோலம்
    • புள்ளிகளிடையே வரைதல்
  • பிற புள்ளிக்கோலங்கள்
    • புள்ளிகளை இணைத்தல்
    • இதயக்கமலம்
Show comments

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.