Views: 380
பிரதோஷ காலத்தில் சரபேஸவரரை வழிபடுவது சிறப்பு. அருகம்புல்லும், வில்வமும் கொண்டு வழிபடுவது சிறந்தது. சரபரை வழிபட்டால் பில்லி, சூன்யம், ஏவல், பிணி, கடன் தொல்லை, இவற்றிலிருந்து விடுபடலாம். திருமணத்தடை அகன்று விரைவில் திருமணம் நடக்கும். அமாவாசை, பௌர்ணமி மற்றும் பிரதோஷ நாட்களில் வழிபடுவது சிறப்பு. ராகு காலத்தில் வழிபடுவது மிக்க நல்லது. சத்ரு சம்ஹாரமே சரபேஸ்வரரின் அபரிமிதமான சக்தி. பக்தர்கள் முழு மனதோடு வழிபட்டு, சரண் அடைந்து சரபரின் அருளைப் பெறுங்கள்.
ஸ்ரீ சரபரின் மூல மந்திரம்.
ஓம் கேம் காம் பட் ப்ராணக்ர ஹாஸி
ஹாஸி, பிராணக்ர ஹாஸி
ஹூம் பட் ஸர்வ சத்துரு சம்ஹாரணாய
சரப ஸாலுவாய பக்ஷி ராஜாய ஹூம்பட் ஸ்வாஹா.
ஸ்ரீ சரபேஸ்வரர் காயத்ரீ மந்திரம்.
ஓம் சாலுவேசாய வித்மஹே
பக்ஷிராஜாய தீமஹி
தந்நோ சரப ப்ரசோதயாத்.