X

குடும்பத்தில் ஒரே ராசி கொண்ட இரண்டிற்கும் மேற்பட்டோர் செய்ய வேண்டிய பரிகாரம் !!!

Views: 191

கணவன்-மனைவி இருவரும் ஒரே ராசியாக இருக்கக் கூடாது என்பது ஜாதக விதி. திருமணத்திற்கு முன்பே ராசி நட்சத்திர பொருத்தம் உட்பட அனைத்து பொருத்தங்களும் பார்த்தே
சேர்க்கிறோம். இருந்தாலும் காதல் திருமணம் புரிவோர் இந்த பொருத்தங்கள் பார்க்காமல் வாழ்க்கையில் இணைந்து விடுகின்றனர்.

அவர்களுக்கு பிறக்கும் குழந்தையும் இதே போல ஒரு ராசியில் பிறக்கின்றனர். இதன் காரணமாக ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, மோசமான தசை நடக்கும் போது குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒரே நேரத்தில் பாதிக்கப்படுவர். அதனால் திடீர் விபத்துகள், இழப்புகள் ஏற்படும். ஒரே குடும்பத்தில் 3 பேரும் ஒரே ராசிக்காரர்களாக அமையும் பட்சத்தில் ஆண்டுதோறும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று வழிபடுவதே சிறந்த பரிகாரமாகும்.

ஒரே ராசியில் ஒருவருக்கு மேல் ஒரு குடும்பத்தில் இருந்தால் கடலோரமாக உள்ள ஸ்தலத்தில் சென்று நீராடி ஸ்வாமி தரிசனம் செய்யலாம். இதை வருடம் ஒரு முறையாவது கடைபிடிக்கலாம். ஒரே ராசிக்காரர்களாக இருக்கும் பட்சத்தில் ஏழரைச் சனி, அஷ்டமச் சனி நடந்தால் குடும்பத்தில் இருந்து ஒருவர் தற்காலிகமாக பிரிந்து இருப்பது நல்லது.

மகன், மகளை உறவினர்கள் வீட்டில் அல்லது விடுதியுடன் கூடிய கல்லூரியில் சேர்க்கலாம். கணவன் மற்றும் மனைவி பணியிட மாற்றம் செய்து கொள்ளலாம். இதனால் கணவன், மனைவி, பிள்ளைகளுடன் வரும் விவாதம், வீண் சண்டைகள்,பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். ஏழரைச் சனி, அஷ்டமச் சனி நடக்கும் போது அனைவரும் ஒரே வாகனத்தில் பயணம் செய்வதையும்
தவிர்க்க வேண்டும்.

*படித்தேன்; பகிர்ந்தேன்*

Show comments

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.