Views: 167
பிறந்தநாள் ஒருவரின் பிறந்த தேதியை கொண்டாடும் நாள் அல்லது ஆண்டுவிழா ஆகும். பல பண்பாடுகளிலும் பிறந்தநாட்கள் பரிசு, விருந்து அல்லது சமயச்சடங்குகளுடன் கொண்டாடப்படுகின்றனஇந்து சமயத்தில் ஒருவரின் பிறந்த நாள் அவர் சார்ந்த பிரிவினர் பின்பற்றும் சந்திர நாட்காட்டி அல்லது சூரிய நாட்காட்டியைப் பொறுத்து அதே மாதத்தில் வரும் திதி அல்லது நட்சத்திரம் (ஜென்ம நட்சத்திரம்) அன்று கொண்டாடப்படுகிறது. அன்றையநாளில் சிறப்பு பூசை நடத்தப்படுகிறது. ஒருவரின் முதல் பிறந்தநாள் உறவினர்களுடன் சிறப்பான சடங்காக விளங்குகிறது. நீண்ட ஆயுளுக்காக சிறப்பு வேள்வி நடத்துவதும் உண்டு.பிறந்த நாள் கொண்டாடுவது 40 சம்ஸ்காரங்களில் ஒன்றாக இருக்கிறது. குழந்தை பிறந்த முதல் ஆண்டு நிறைவில் ஆயுஷ் ஹோமம் என்று பெரிய ஹோமம் நடத்துவோம் அல்லது கோவிலுக்கு குழந்தையைக் கூட்டிக் கொண்டு போய் விசேட அபிஷேக ஆராதனைகளை செய்வோம். இப்போதெல்லாம் மேலை நாடுகள் போல ‘கேக்’கும் வெட்டத் துவக்கி விட்டோம்.இதேபோன்று ஒருவரின் அறுபதாவது பிறந்தநாள் (சஷ்டியப்த பூர்த்தி), எழுவதாவது பிறந்தநாள் (பீஷ்ம சாந்தி) மற்றும் எண்பதாவது பிறந்த நாள் (சதாபிசேகம்) சிறப்பாகக் கொண்டாடப்படுவதுண்டு. அறுபதாவது பிறந்தநாளன்று மனைவிக்கு மறுதாலி அணிவிப்பதால் சில நேரங்களில் இது அறுபதாம் கல்யாணம் எனவும் அழைக்கப்படுகிறது. 29 நாட்களுக்கு ஒரு முறையே பிறை தரிசனம் கிடைக்கும் ஆதலால் 1000 முறை தரிசிக்க 80 ஆண்டு எட்டு மாதம் ஆகிவிடும். எண்பதாவது பிறந்தநாளுக்கு அண்மித்து ஒருவர் ஆயிரம் பிறைகள் காணும் வாய்ப்புள்ளதால் இவர்கள் ஆயிரம் பிறை கண்டோர் எனவும் அழைக்கப்படுகின்றனர்.ஆனால் இந்துக்கள் இத்தோடு நிற்கவில்லை. வேத மந்திரத்தில் நூறாண்டுக் காலம் வாழ்க, நோய் நொடியில்லாமல் வாழ்க (பஸ்யேம சரதஸ் சதம், ஜீவேம சரதஸ் சதம், நந்தாம சரதஸ் சதம், மோதாம சரதஸ் சதம், ப்ரப்ரவாம சரதஸ் சதம்…..) என்று சொல்வதால் 100 ஆண்டுகள் வரை என்ன என்ன பிறந்த நாள் விழா என்று சாத்திரங்கள் பட்டியலே போட்டுக் கொடுத்துவிட்டன.61- ஆவது பிறந்த தினம் – சஷ்டி அப்த பூர்த்தி 70- ஆவது பிறந்த தினம் – பீம ரத சாந்தி 81- ஆவது பிறந்த தினம் – சதாபிஷேகம் 100- ஆவது பிறந்த தினம் – பூர்ணாபிஷேகம் இது மட்டுமல்ல. இதற்கிடையில் பீம சாந்தி – 55 ஆவது பிறந்த தினம் உக்ர ரத சாந்தி -60 ஆவது பிறந்த தினம் சஷ்டிதம அப்த பூர்த்தி- 61 ஆவது பிறந்த தினம் பீம ரத சாந்தி — 70 ஆவது பிறந்த தினம் ரத சாந்தி – 72 – ஆவது பிறந்த தினம் விஜய சாந்தி –78 ஆவது பிறந்த தினம் ப்ர பௌத்ர சாந்தி – பேரனுக்கு ஆண்குழந்தை பிறந்தவுடன். அப்போது கனகாபிஷேகமும் செய்வர். சதாபிஷேகம் – 80 ஆண்டு 8 மாதம் முடிந்த பின்னர் ம்ருத்யுஞ்சய சாந்தி – 85 ஆவது பிறந்த தினம் 100 வயது –பூர்ணாபிஷேகம்.ஆக எல்லா ஜயந்திகளையும் நாம் கொண்டாட முடியவிட்டாலும் 60, 80, 100 ஆகிய ஆண்டுகளில் கொண்டாடலாம்.*படித்தேன்; பகிர்ந்தேன்*